கொல்கத்தாவில் பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளை அடையாளம் காட்டியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 5.02.2012 அன்று இரவு கேளிக்கை விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அறிமுகம் இல்லாத இளைஞர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது மயக்கத்தில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பவ்யமாக பேசி, வீட்டில் இறக்கிவிடுதாக கூறி காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது துப்பாக்கி முனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,
பிப்ரவரி 5ம் தேதி கேளிக்கை விடுதியில் இருந்து திரும்பி வரும்போது அந்த கேளிக்கை விடுதியில் நண்பர்களாகப் பழகிய 4 பேர் காரில் எனக்கு லிப்ட் கொடுத்தனர். நானும் அவர்களுடன் காரில் ஏறினேன். ஆனால் திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். அவர்களை பேஸ்புக் உதவியுடன் அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி போலீசில் புகார் கூறினேன். ஆனால் போலீசார் அதை ஏற்காமல் என்னைக் கேலி செய்தனர்.
இந்த விவகாரத்தை தைரியத்துடன் வெளியுலகுக்கு கூறியுள்ளேன். விசாரணைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு தகவல்களைக் கூறுவேன். காரில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்றார்.
இறுதியில் கடும் நெருக்கடிக்குப் பின்னர் போலீசார் எஃப்ஐஆர் பதிவுசெய்தனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா இணை போலீஸ் கமிஷனர் தமயந்தி சென் கூறுகையில், பிப்ரவரி 5 ம் தேதி அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் பிப்ரவரி 9 ம் தேதிதான் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்றார். அவரின் புகாரை போலீசார் வாங்க மறுத்தது குறித்து கேட்டபோது, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment