சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால் மேனன் என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். க� ��ெக்டருடன் சென்ற பாதுகாவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்று விட்டு அவரை கடத்தி சென்றுள்ளனர்.
ஒடிசாவில் மட்டுமின்றி அதனருகே உள்ள மாநிலமான சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் தொடர்கிறது. முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு ம ுன் இரண்டு இத்தாலியர்கள் கடத்தப்பட்டு ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியதை தொடர்ந்து மாநில அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.வை விடுவிப்பதற்கு முன், சத்தீஸ்கர் கலெக்டர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment