News Update :
Home » » பிட் அடிக்காதே! பாப்பா மலர்!

பிட் அடிக்காதே! பாப்பா மலர்!

Penulis : karthik on Saturday, 21 April 2012 | 01:23



பிட் அடிக்காதே!

ஒன்பதாம் வகுப்பிற்கான ஆண்டிறுதித்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.குமார் ஆசிரியர் தன்னை பார்க்கிறாரா என்றுபார்த்தான் அவர் பார்வை வேறுபக்கம் இருக்கவே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறுதாள் ஒன்றினை எடுத்து விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தான்.
 அவன் நெஞ்சம் படபடத்தது. கை நடுங்கியது. இது அவனுக்கு புதுப்பழக்கம்.நன்றாக படிக்க கூடியவன் தான் குமார். ஆங்கிலம் தான் சரியாக வராது. அதிலும் அடித்துபிடித்து பாஸாகிவிடுவான். எல்லாவற்றிலும் எண்பது மதிப்பெண் எடுத்தால் இதில்மட்டும் நாற்பது எடுப்பான்.
 ஆசிரியர்களும் கொஞ்சம் முயற்சி எ� ��ுத்து படித்தால் நல்ல மதிப்பெண்களைஎடுத்துவிடலாம் குமார் வருந்தாதே என்று அவனை ஊக்கப் படுத்துவார்கள். ஆனால்ஆங்கிலத்தில் மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறினான். அப்போதுதான் எப்போதும் கடைசிபெஞ்சில் அமர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஆசிரியர்களிடம் அடி வாங்கிக்கொண்டிருக்கும் மணி அவனுக்கு ஒரு யோசனை சொன்னான்.
 குமாரு! ஆங்கிலம் அன்னிய மொழிடா! அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது எதுக்குஅதுங்கூட போராடுர? ஈஸியா மார்க் எடுக்க நான் வழி சொல்றேன் வா என்று அழைத்து சென்றுஇந்த பிட் அடிக்கும் யோசனையை கூறினான்.
குமார் முதலில் பயந்தான். இப்படி பயந்தாஎப்படி மார்க் எடுப்ப? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் எத்தனை முறை பி� ��்அடிச்சிருக்கேன் தெரியுமா? களவும் கற்று மறன்னு வாத்தியார் தானே சொல்லிக்கொடுத்தாரு சும்மா தைரியமா அடி என்று சில உத்திகளை சொல்லிக் கொடுத்து அனுப்பிவைத்தான்.
 ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கும் ஆசை குமாரை பிட் அடிக்க வைத்தது.ஆனால்இந்த விசயத்தை அவனது பதட்டமே காட்டிக் கொடுத்தது.அவனுடைய வகுப்பாச� ��ரியர் அவனருகேவந்தார். என்ன குமார் ஏன் இப்படி வியர்த்து வழியறே? ஏன் உடம்பெல்லாம் நடுங்குது?உடம்பு எதுவும் சரியில்லையா என்று பரிவுடன் கேட்டார்.
 குமாருக்கு கண்கள் கலங்கின. இவ்வளவு அன்பு வைத்திருப்பவரையா நாம்ஏமாற்றுகிறோம் என்று அழுகையாக வந்துவிட்டது அழ ஆரம்பித்தான். ஏன் அழுவுறே குமார்?என்ன ஆச்ச� �� விசயத்தை சொல்லு என்றார் வகுப்பாசிரியர்.
 சார் சார்! என்னை மன்னிச்சிடுங்க என்று அழுதபடிபேப்பரின் அடியில் இருந்த பிட்டை எடுத்து நீட்டிய குமார் சார் நான் தெரியாம்இப்படி நடந்துகிட்டேன். இதிலிருந்து இன்னமும் எதுவும் எழுதவில்லை என்னை பெயில்பண்ணிடாதீங்க சார்! அதிக மார்க் வாங்கணும்கற ஆசையில் செஞ்ச ிட்டேன் சார் ஆனா தப்புசெய்யறோம்னு எனக்கு கை கால்லாம் நடுங்க ஆரம்பிடுச்சு சார்! என்னை மன்னிப்பீங்களாசார் என்று திக்கி திக்கி கேட்டான்.
 குமார் என்ன இது? நீயே இப்படி செய்யலாமா? போகட்டும் விடு! இந்த வருடம் நான்உன்னை மன்னித்துவிடலாம். ஆனால் அடுத்த வருடம் இந்த பழக்கம் அடுத்த வருடம்தொடர்ந்தால் உன் எத� �ர்காலம் என்னாவது? மூன்று வருடங்கள் தேர்வு எழுத முடியாதுஅத்துடன் உன் மீது கரும்புள்ளி அல்லவா படியும்? என்றார்.
 தலைகுனிந்தான் குமார். சார்! ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கனும்கறஆசையில் தவறு செய்து விட்டேன் சார்! என்னுடைய தவறை உணர்ந்து விட்டேன் சார் இனிஒருபோதும் இப்படி ஒழுங்கீனமாக நடக்கமாட்டேன� � சார்! என்னை மன்னியுங்கள் என்றுவகுப்பாசிரியரின் காலில் விழுந்தான் குமார்.
  எழுந்திரு குமார்! அதிக மார்க் எடுக்க நினைக்கும் உன் ஆசை தவறானதில்லை!அதற்காக நீ எடுத்த முயற்சிதான் தவறு! தேர்வு என்பது என்ன? நீ என்ன படித்தாய்என்பதை அரிய உதவும் ஒரு டெஸ்ட். இதற்கு போய் காப்பி அடிக்கலாமா? நன்கு முயன்றால்உ� �்னால் ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். தண்டனையைவிட மன்னிப்பதில்தான் ஒருவன் தன் தவறை உணர்வான். சரி இந்த ஒரு முறை உன்னை மன்னித்தேன். உனக்குதெரிந்ததை எழுது கட்டாயம் வெற்றி பெறுவாய் என்று அவனை எழுப்பினார் ஆசிரியர்.
 தெளிந்த மனதுடன் தேர்வெழுத ஆரம்பித்தான் குமார்.

உங்களுக்குத் தெரியுமா?
 ஈரான் நாட்டின் தேசிய சின்னம் ரோஜா

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரல� ��மே!


http://sex-story-indian.blogspot.com




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger