சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயிருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். .
சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன் வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளிக்கூடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. இ தனால் சம்பவ நாளன்று மகனைக் கூப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதவில்லையா என்று கேட்டியிருக்கிறார்.
ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை லீ மகனை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக எட்டி உதைத்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ அந்த 6 வயது பாலகனை அப்படியே தூக்கி எறிந்துள்ளார்.
இதில் வீட்டுச் சுவரில் மோதி சரிந்த மகனை ஈவு இரக்கம் ஏதுமின்றி பக்கத்தில் இருந்த மலைக்கு கொண்டு சென்று உயிருக்குப் போராடிய மகனை அப்படியே குழிதோண்டி புதைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் லீ.
லீயின் இந்த கொடுஞ்செயலானது மகனின் நண்பர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்திருக்கின்றனர். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment