இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழ� �� இன்று காலை சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது.
இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சு� �ர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் இலங்கைப் பயண அனுபவங்கள், அங்கு பார்த்தவற்றை கூற உள்ளனர்.
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு சிங்கள அரசு உண்மையிலேயே உதவிகள் செய்கிறதா? இந்தியா அவர்களுக்கு அளித்த நிதியுதவி எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? போன்ற தகவல்களை அவர்கள் நிருபர்களிடம் விளக்கமாக கூற உள்ளனர்.
அதேபோல, இந்தக் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையில் தா ங்கள் பார்த்த நிலவரம் குறித்து அரசுக்கு அறிக்கை தர உள்ளார்.
இலங்கைக்கு நற்சான்று அளிப்பாரா அல்லது உள்ளதை உள்ளபடி சொல்வாரா சுஷ்மா... பார்க்கலாம்!
Post a Comment