தமிழில் ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட படம், இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம், பந்தா பரமசிவம். இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்து இருந்தார். ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.
`பந்தா பரமசிவம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை நாகித்வாலா என்ற பட அதிபர் வாங்கினார். படத்துக்கு, `ஹவுஸ் புல்-2 என்று பெயர் சூட்டப்பட்டது. பிரபு நடித்த வேடத்தில் அ� �்ஷய்குமார் நடித்தார். ரம்பா நடித்த வேடத்தில் அசின் நடித்தார். கலாபவன் நடித்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்தார். சாஜித்கான் இயக்கினார். இந்த படம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்து இருக்கிறது.
இந்த தகவலை கேள்விப்பட்ட உற்சாகத்தில், பந்தா பரமசிவம் பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். புதிய படத்துக்கு அவர், `ஒன்பதுல குரு என்று பெயர் சூட்டியிருக்கிறார். `ஹங் ஓவர் என்ற இந்தி படத்தை தழுவிய கதை இது.
Post a Comment