விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் பகுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., கோபால்சாமி கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழா முடிந்து திரும்பிய போது, ராஜபாளையம் அதிமுக பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பொன்னுத்தாயின் தந்தையான மேலப்பாட்டகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான் உள்ளிட்ட சிலர், எம்எல்ஏ கோபால்சாமியிடம் எங்கள் யூனியன் கவுன்சிலர்களை ஏன் அழைத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ள� �ர்.
அப்போது இருதரப்புக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ கோபால்சாமியின் வேட்டி அவிழ்ந்தது. அடிதடி மோதல் சம்பவங்களில் அனுபவம் இல்லாத எம்எல்ஏ தள்ளுமுள்ளுவில் ஜட்டியோடு காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.
பின்னர், கோபால்சாமி ராஜபாளையம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் , அங்கு டி.எஸ்.பி.,யிடம் தன்னை தாக்கியதாக வாய் மூலம் புகார் கொடுத்தார் என்றும், எழுத்துப்பூர்வ முற ையில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ., தரப்பில் 2 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
எதிர்தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எதிர்தரப்பினர் டி.எஸ்.பி.,யை சந்திக்க விரைந்தனர்.
அழகாபுரியான் கூறுகையில், பொட்டல்பட்டி ராஜேந்திரன் என்னை கத்தியால் குத்தினார். எம்எல்ஏ கோபால்சாமி என்னை ஜாதியைச் சொல்லி திட்டினார் என்றார். உடன் இருந்த அழகாபுரியான் மகள் பொன்னுத்தாயி, என் அப்பாவை எம்எல்ஏ கோபால்சாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள் என்று கண்ணீர் விட்டார்.
இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால், எழுத்து மூலமாக புகார் எதுவும் கொடுக்காத கோபால்சாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம், நடந்த கேவலமான சம்பவத்தை பத்திரிகையில் போட்டு கட்சியின் பேரை கெடுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அழகாபுரியான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் ராவணனின் சிபாரிசில் எம்எல்ஏ சீட் வாங்கியவர் கோபால்சாமி. ராவணனுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படியும் அமைச்சராவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் மார்தட்டி கொண்டிருப்பவர் வேட்டியை இழந்து ஜட்டியோடு தப்பியது கொடுமையிலும் கொடுமை என அதிமுகவினரே 'உச்' கொட்டுகிறார்கள்.
Post a Comment