இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜனதா எம்.பி. சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று சுற்ற ுப் பயணத்தை முடித்தது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். இன்று மாலை சென்னை திரும்பிய அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சுதர்சன நச்சியப்பன்:
இலங்கையில் தமைழர்களின் நிலையை குறித்து தெரிந்து கொள்ள இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட குழு இலங்கை 4 நாள் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளோம். இந்த குழுவில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள அதிகார வரம்புகளை தெரிந்து கொண்டோம். விதவைகள் மறுவாழ்வுக்காக இந்தியா உதவி வருகிறது. அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ராணுவம் எங்களோடு வரவில்லை. நாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம். என கூறினார்.
கிருஷ்ணசாமி கூறுகையில்:
இலங்கையின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் சென்று பார்வையி� ��்டோம். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம். யாழ்ப்பாணத்தில் ராணுவம் அதிகாரம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் விசாரணைக்கு உட்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இலங்கை அரசு ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், அந்த பகுதிகளில் உள்ள சாலை உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. இன்று காலை அதிபர் ராஜபக்சேவுடம் நடந்த சந்திப்பில் இவை அனைத்தும் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த சுற்றுப்பயணம் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என கூறினார்.
சித்தன் கூறுகையில்:
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை 4 குழுவாக சந்தித்து அவர்களின் நிலைகள் குறித்து கேட்கப்பட்டது. 3 வருடங்களாக கஷ்டப்பட்டு வரும் அவர்கள், எப்படியாவது தங்கள் சொந்� � இடங்களுக்கு செல்ல உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். இந்த பணி முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் தமிழர்கள் அங்கே குடியமர்த்தப்படுவர் என கூறினார்.
Post a Comment