நமது நாட்டில் பாமரர்கள� � முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேனீர்தான் உற்சாகபானமாக உள்ளது.
அந்தவகையில் நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேனீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது.
இந்த தகவலை மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்ச� �ங் அலுவாலியா தெரிவித்தார். அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் அசாமில் முதன்முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212-ம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி முதல் தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார்.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்� ��ள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment