தெலுங்கு நடிகர் ராணாவை திரிஷா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
நான் நடிகையாக இருப்பதால் என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ராணாவை நான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர். ராணாவும் நானும் நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.
திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூற மாட்டேன். முதலில் எனக்கு மாப்பிள்ளையாக வருவதற்கு தகுதியானவரை நான் சந்திக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட நபரை நான் சந்திக்கவில்லை. இப்போது நான் தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு நிறைய தோழிகள் உள்ளனர்.
சினிமாவில் இரு நடிகைகள் நண்பர்களாக இருப்பது கடினம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். நானும் பழைய நடிகை ராதா மகளும் தற்போது நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். என்னுடன் பள்ளி காலத்தில் பழகிய தோழிகளுடனும் தற்போது நெருக்கமான நட்பு வைத்துள்ளேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
Post a Comment