தப்படிக்கிற மகராசன், கூடவே மப்படிச்சுட்டும் வந்த மாதிரி தாறுமாறாக சத்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். இந்த சத்தம் நடிகை அமலாபால் குறித்து என்பதுதான் ஆம்புலன்சில் ஏற்ற வேண்டிய அவசரச் செய்தி.
இவர் நடித்து வெளியான படங்களில் மைனாவை தவிர ஒரு படமும் வியாபார ரீதியாக வெற்றியடைந்த படங்கள் இல்லை. அதுமட்டுமில்லை, தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் கூட அமலாவின் ராசி, ஆசிட் வீச்சாகதான் இருக்கிறது என்கிறார்கள் இந்த சப்த சிகாமணிகள். இந்த வில்லங்க பேச்சு அமலாவின் மார்க்கெட்டுக்கு வலுவான சறுக்கலை ஏற்படுத்தும் என்பதை மட்டும் முன் கூட்டியே கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
இவ்வளவு பதற்றத்திலும் அவர் நம்பிக் கொண்டிருப்பது 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தைதான். அதற்கேற்றார் போல முன் கூட்டியே படத்தை பார்த்த சில விஐபிகள் 'ஷ்யூர் ஹிட்' என்று பாராட்டுரைகளை அள்ளிவீச, அமலாவின் மனசு ஜில்லாகிக் கிடக்கிறது.
Post a Comment