எனது அழகை மேக்கப் மூலம் மிகைப்படுத்தி காட்ட எனக்கு விருப்பம் இல்லை, என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அம்மணிக்கு வயதாகி விட்டதால் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக வெளியான செய்தியை த்ரிஷா ஏற்கனவே மறுத்திருந்தார். த்ரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்டோருக்கு தெலுங்கு திரையுலகில் நிறைய வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதனால் தனது தோற்றத்தில் சிறு மாற்றங்களை செய்திருக்கும் த்ரிஷா, மேக்கப் போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், மேக்கப் போட்டு அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் எனக்கு ஆர்வம், விருப்பம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன். ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன், என்று கூறியுள்ளார்.
Post a Comment