ரஜினி, ஐஸ்வர்யா, அனுஷ்கா, ரிச்சா, ஜெனிலியாவை மறக்க முடியாது என்றார் தனுஷ்.இன்று காதலர் தினம்.
இதையொட்டி தனுஷ் தனக்கு பிடித்தமானவர்கள் பற்றி கூறியது:
சினிமாவில் என்னுடன் ஜோடியாக நடித்த சிலரின் கதாபாத்திரங்களை இன்றும் காதலிக்கிறேன். அதுவொரு கனா காலம் படத்தில் பிரியாமணி ஏற்ற துளசி, மயக்கம் என்ன படத்தில் ரிச்சா ஏற்ற யாமினியை மறக்க முடியாது. அனுஷ்கா எனது ரோல் மாடல்.
வாழ்வில் என்ன வருகிறதோ அப்படியே ஏற்றுக்கொள்பவர். எனக்கு பொருத்தமான ஜோடி ஜெனிலியா. தோற்றம், பாடி லாங்கு வேஜ் எல்லாமே எங்களுக்கு ஒரே பாணியில் இருக்கும். சிம்புவுக்கும் எனக்கும் பகைபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.
அவருடன் எந்த பிரச்னையும் இல்லை. இருவரும் சந்திக்கும்போது 'ஹாய்' சொல்லிக்கொள்வோம். என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் சமமான புரிதல் இருக்கிறது. எந்த வதந்தியும் எங்களை பாதிக்காது. இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் என் அண்ணன் செல்வராகவன்.
அவர்தான் எனது குரு. நான் மிகவும் நேசிப்பவர் ரஜினி. அவர் உடல் நலமில்லாதபோது என்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெரும்பாலான நேரத்தை அவருடனே கழித்தேன். காதலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்,
தனித்தன்மையை தக்க வைக்க இடம் தர வேண்டும், உங்களை நேசிப்பதைவிட நீங்கள் அதிகம் நேசிக்க வேண்டும். 4 சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை இருவருக்குள் ரகசியம் காக்க வேண்டும். இருவரது பிரச்னைக்குள் 3வது நபரை தலையிடவிடக்கூடாது.
Post a Comment