அரவான் பட நாயகி அர்ச்சனா கவியை தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலரும் விரும்புகிறார்களாம். இந்த தகவலை அர்ச்சனா கவியே வெளியிட்டுள்ளார். டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரவான் படத்தில் தன்ஷிகாவுடன் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை அர்ச்சனா கவி.
அரவான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அர்ச்சனாவை பல முன்னணி இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் விரும்பி தங்களது படத்தில் நடிக்கும்படி அழைத்திருக்கிறார்களாம்.
இதுபற்றி அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில், அரவான் சூட்டிங் முடிந்தவுடனேயே நான் கேரளாவுக்கு வந்து விட்டேன். படத்தின் ரிலீசுக்குப் பின்புதான் சென்னைக்கு வருவேன். தமிழில் பல முன்னணி இயக்குநர்கள் பேசினார்கள். இப்போதைக்கு நடிக்க மாட்டேன். அரவான் படத்தைப் பார்த்து விட்டு பேசுங்கள் என்று சொல்லி விட்டேன்.
இன்னொரு விஷயம் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். விஜய், விக்ரம் போன்ற மல்டி ஸ்டார்களின் படங்களில் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, என்று கூறியிருக்கிறார்.
home
Home
Post a Comment