News Update :
Home » » நைட் கிளப் சென்ற பெண் 5 நபர்களால் காரில் வைத்து கதற கதற கற்பழிப்பு!!

நைட் கிளப் சென்ற பெண் 5 நபர்களால் காரில் வைத்து கதற கதற கற்பழிப்பு!!

Penulis : karthik on Friday, 17 February 2012 | 04:40

 


கொல்கத்தாவில் 30 வயதுடையை பெண் 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3வது நபரை அப்பெண் பேஸ்புக் மூலம் அடையாளம் காட்டியுள்ளாராம்.
பிப்ரவரி 4ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக தற்போது 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், பார்க் தெருவில் உள்ள ஒரு நைட் கிளப்புக்கு வெளியே டாக்சிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தனது காரில் அந்தப் பக்கமாக வந்தார். எனக்கு லிப்ட் கொடுப்பதாக அவர் கூறினார். அவரை நைட் கிளப்பில் வைத்து நான் பார்த்து பரிச்சயமாகியிருந்ததால் தயக்கம் காட்டாமல் ஏறிக் கொண்டேன்.

முதலில் காரில் 2 பேர் இருந்தனர். ஆனால் நான் காரின் பின் சீட்டில் ஏறியதும் திமுதிமுவென மேலும் 3 பேர் காருக்குள் புகுந்து ஏறிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் என்னைத் தாக்கினார். மற்றவர்கள் என்னை, அடுத்தடுத்து பலாத்காரம் செய்தனர்.

நான் கத்த முயன்றபோது என்னை ஒருவன் தாக்கி விட்டான். மேலும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டினான். பின்னர் துப்பாக்கி முனையில் என்னை ஐவரும் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் என்னை காரை விட்டு இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றனர் என்றார்.

சம்பவத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக உடனடியாக காவல் நிலையத்தை அணுகவில்லை என்று கூறும் அப்பெண் பிப்ரவரி 9ம் தேதி புகார் கொடுத்தார்.

காவல் நிலையத்திற்கு அன்று அவர் போனபோது போலீஸார் அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நைட் கிளப்புக்குப் போனால் இப்படித்தான் நடக்கும் என்று போலீஸார் கிண்டல் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அப்பெண்ணுக்கு தற்போது மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. ஆனால் பலாத்காரம் நடந்து இத்தனை நாட்களாகி விட்டதால் தேவையான ஆதாரங்களை சேகரிப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பேஸ்புக்கில் பார்த்து அடையாளம் காட்டியுள்ளார் இப்பெண். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ஜனவரி 1ம் தேதி முதலே இந்தியாவில் இல்லை, வெளிநாடு போய் விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதற்கான ஆதாரத்தையும் போலீஸாரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்.

இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுடன், இப்பெண்ணையும் தீவிரமாக விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger