விளம்பரப்படமா, வேணாம்ப்பா என்று கட் அண்டு ரைட்டாக சொல்லி வருகிறவர் அஜீத் மட்டுமே. மற்றபடி கோடம்பாக்கத்தை பொருத்தவரை அடகுக்கடை விளம்பரத்திலிருந்து ஆணிக்கடை விளம்பரம் வரைக்கும் பேசி பேசியே துட்டு பார்த்து வருகிறார்கள் நம்ம ஊரு ராசாக்கள்.
லேட்டஸ்ட்டாக இந்த இன்ப குளத்தில் நீச்சலடித்து கோடிகளுக்கு குறி வைத்திருக்கிறார் தனுஷும். வேஷ்டி விளம்பரத்தில் நடிக்கணும் என்று சில கம்பெனிகள் அழைத்தபோதெல்லாம், ஏன்ப்பா... அது என் இடுப்புல நிக்கும்னு நம்பிக்கை வேற இருக்கா உங்களுக்கெல்லாம்? என்று கேட்டு வேஷ்டி கோஷ்டியை விரட்டியடித்தவர் தனுஷ்.
இதுபோல நாளொரு விளம்பரத்தையும் பொழுதொரு கோடியையும் அலட்சியப்படுத்திய தனுஷ், வெகுநாள் யோசனைக்கு பின் ஒரு எண்ணை விளம்பரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த எண்ணை விளம்பரத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் சூர்யா.
என்ன காரணத்தாலோ இதில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாம் அந்த நிறுவனம். கைக்கு வந்த கோடிகளை லவட்டிக் கொண்டாரே என்று லேசாக சீறுகிறதாம் சிங்கம்.
Post a Comment