
நடிகை உதயதாரா, ஜூபன் சோப் என்ற விமான பைலட்டை திருமணம் செய்ய இருக்கிறார். தீ நகர், கண்ணும் கண்ணும், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. தமிழ் தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. துபாயை சேர்ந்த விமான பைலட் ஜூபன் ஜோசப் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மார்ச் மாதமும், அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது. திருமணம் கேரளாவில் நடக்க உள்ளது.
Post a Comment