லிங்குசாமியின் சண்டக்கோழி படம் மூலம் மாஸ் ஹீரோவாக ஆனவர் நடிகர் விஷால். தொடர்ந்து அதிரடி ஹிட் படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்ட விஷால், முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க போகிறார். நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தான் இந்த படத்தை இயக்க போகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது, முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளேன். சுந்தர்.சி இயக்கும் இப்படம், அவரது முந்தைய படங்களை போன்று பக்கா கமர்ஷியல் படமாக, அதேசமயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்றார்.
தற்போது விஷால், த்ரிஷாவுடன் சமரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் பாங்காக்கில் நடக்கிறது, அதனைத்தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச்சில் நடக்கிறது. இப்படத்தை முடித்த பின்னர் சுந்தர்.சி.யின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த முழு விபரமும் வெளியாகும்.
இதனிடையே மீண்டும் லிங்குசாமியின் இயக்கத்தில், சண்டக்கோழி பார்ட்-2 படம் உருவாக இருப்பதாகவும், அதில் ஹீரோவாக விஷாலே நடிக்கப்போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
Post a Comment