மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர்.
தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளன.
தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது.
இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இவர்களில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டாக கற்பழித்து விட்டு கொலை செய்து உள்ளனர். ஆண் ஊழியர்களில் ஒரு தொகையினரை கொன்று புதைகுழி தோன்றி விட்டு சுட்டுக் கொன்று அப்புதைகுழிகளுக்குள் சடலங்களை போட்டு உள்ளனர் என்று உள்ளது.
Post a Comment