தயாரிப்பு நிறுவனங்கள் சம்மதித்தால் மட்டுமே, தான் நடிக்கும் திரைப்படங்களின் விபரங்கள் பற்றி கூறுவதாக நாயகி அசின் தெரிவித்துள்ளார்.கொலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடித்த அசின், பாலிவுட்டின் நட்சத்திர நாயகர்களான "கான்களோடு" நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்
இந்திப்பட நிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே படங்களை பற்றி பேசுவதாக அசின் முடிவெடுத்துள்ளார்.
பாலிவுட்டில் சேதன் பகத்தின் "2 ஸ்டேட்ஸ்" படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்கும் அசின், வசூல் நாயகன் ஷாருக்கானுடன் இணைகிறார். அதுமட்டுமின்றி சஜித்தின் இந்திப்படத்திலும் நடிக்கிறார்.
நான் இந்திப்படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறேன். படநிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே நான் நடிக்கும் படங்களை பற்றி என்னால் பேசமுடியும்.
நான் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கும் படம் பற்றி சமீபத்தில் பட உலகில் ஆர்வமாக கேட்டுள்ளார்கள்.
படத்தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே நான் படத்தை பற்றி பேசுவேன் என்று அசின் உறுதியாக கூறியுள்ளார்.
Post a Comment