சினிமா நடிகர்கள் பங்கு கொண்ட 'செலிபிரெட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்)' கோப்பையை இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 12 ம்தேதி கைப்பற்றி, சென்னை ரைனோஸ் அணி சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான நடிகர் விஷால் பேசியதாவது;
"நாங்க எல்லோரும் நடிகர்களா இல்லாம சிசிஎல் கிரிக்கெட் வீரர்களா உங்களை இங்க சந்திக்கிறோம். சிசிஎல் கப்பை ரெண்டாவது முறையா ஜெயிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இதுக்கு என்னோட டீம் பிளேயர்ஸ்தான் காரணம். அவங்களுக்கு எனது நன்றிகள்.
எல்லோரும் ஸ்கூல்ல, காலேஜ்ல கிரிகெட் விளையாடி இருப்போம். ஆனா புரபெஷனலா விளையாட ஆரம்பிச்ச பிறகு நாங்க நடிகர்களா இருப்பதை மறந்து வீரர்களா மாறிடோம். இந்தியாவில் உள்ள அத்தனை சினிமா உலகத்தினரையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வந்தது
சிசிஎல்தான். விஷ்ணுவுக்கு அடிபட்டதை பார்த்துவிட்டு நிறைய பேர் எங்ககிட்ட வந்து 'இதெல்லாம் உங்களுக்கு தேவையா?'ன்னு கேட்டாங்க. ஆனா ரசிகர்களின் மத்தியில் விளையாடிய எங்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெருமையான விஷயம்னு… நடிப்பைத் தவிர எங்களிடம் கிரிக்கெட் திறமையும் இருக்குன்னு காட்ட வச்சதே இந்த சிசிஎல்தான்.
கிரிக்கெட் விளையாடிய ஒருமாதம் முழுக்க நாங்கள் நடிகர்கள் என்பதை மறந்து வீரர்களாகவே மாறி விட்டோம்" என்றார்.
நடிகைகளுக்கான 'சிசிஎல்' வருமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அப்படி 'விமென் சிசிஎல்' ஆரம்பிச்சா என் டீம் ஆட்களை கழட்டி விட்டுட்டு அவங்களோட சேர்ந்திடுவேன். அது தெரியல. அப்படி நடந்தலும் நடக்கலாம். கிரிக்கெட் மட்டுமல்ல பிற போட்டிகளுக்கும் இது போன்று முக்கியத்துவம் தர இருக்கிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Post a Comment