இது நான் சமீபத்தில் படித்தது. ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்
ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது
1. அழகாக
2. கம்பீரமாக
3. நல்ல வசதியுடன்
4. சொல்வதை பொருமையாக கேட்கணும்
5. கட்டான உடல் அழகு
6. நல்ல உடையணிய வேண்டும்
7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்
8. ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கணும்
அதே பெண் 35 வயதுக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பாள்
1. பார்க்க சுமாரான தோற்றம்
2. ஓரளவு வசதி
3. கூட பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
4. வீட்டு சமையலை ரசித்து சாப்பிட வேண்டும்
5. வேலைகளில் கூட உதவி செய்ய வேண்டும்
6. ரங்கநாதன் தெரு…. எங்கே போனாலும் கூட முகம் சுளிக்காமல் வர வேண்டும்
7. எப்பவாவது திடீர்னு காலேஜ் பசங்க மாதிரி டிரஸ் போடணும் ( மத்தவங்க சிரிச்சாலும் கண்டுக்கபடாது)
8. நான் எந்த மொக்க ஜோக் சொன்னாலும் சிரிக்கணும்.
ஒரு பெண் 40 வயதுக்கு பிறகு ஆணிடம் எதிர்பார்ப்பது
1. ரொம்ப பார்க்கிறதுக்கு பக்கி மாதிரி இருக்க கூடாது.
2. நான் பேசினால் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கணும் தூங்க கூடாது
3. ஒழுங்கா வேலைக்கு போகணும்
4. தொப்பையை மறைக்கிற மாதிரி சட்டை போடணும் ( ஷார்ட் சட்டையெல்லாம் மறந்து விடணும்)
5. வாரத்துக்கு ஒரு முறையாவது ஷேவ் செய்யணும்
50 வயதுக்கு மேல் பெண் எதிர்பார்ப்பது
1. பொது இடத்தில் எல்லார் முன்னாடியும் கண்ட இடங்களில் சொறிய கூடாது
2. அடிக்கடி கடன் வாங்க கூடாது
3. நேரம் கிடைக்கறப்பல்லாம் தூங்க கூடாது
4. ஒரே மொக்க ஜோக்கையெ பல முறை சொல்லி படுத்தகூடாது
5. எப்பவாவது ஒரு வாரமாவது ஷேவ் செய்ய வேண்டும்
60 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது
1. சின்ன குழந்தைகளை பயமுறுத்த கூடாது
2. பாத்ரூம் எங்க இருக்குன்னு ஞாபகம் வச்சுக்கணும்.
3. குறட்டை சத்தம் மிக கம்மியாக இருக்கணும்
4. எப்பவும் வெறும் உடம்போடு இருக்க கூடாது
5. பல் செட்டு எங்க வைத்தோம் என்று ஞாபகம் இருக்கணும்
6. ஈசியா ஜீரணமாகிற உணவுதான் பிடிக்கணும்( பிரியாணி ஈசியா ஜீரணம் ஆகிடும்தானே)
7. கிழமை, தேதி எல்லாம் ஞாபகம் இருக்கணும்.
70 வயதுக்கு மேல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது
1. நல்ல உயிரோடு இருக்கணும்
2. டாய்லட், பாத்ரூம் ஒழுங்கா போய்க்கணும்
80 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது
________________________________ ( ஒண்ணுமேயி்ல்லங்க அதான்)
சொன்னது எல்லாத்துக்கும் மேல பெண்ணும் சரி ஆணும் சரி எல்லா வயதிலும் எதிர்பார்ப்பது பரஸ்பர அன்பும் ஆதரவும் ஆதரவும்தான். எனவே கடைசிவரை காதலியுங்கள் (உங்கள் மனைவியை மட்டும்)
Post a Comment