தெலுங்கில் வசூல் சாதனை படைத்த மகதீரா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ராஜ்மௌலி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கும் படம் "நான் ஈ". இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹீரோ படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுகிறார். மகதீரா படத்தைப் போல் ஹீரோ வில்லனை மறுபிறவியில் பிறவியெடுத்து அழிக்கிறார். மறுபிறவியில் "ஈ"-ஆக பிறவியெடுத்து வில்லனை அழிக்கும் போது தான் சந்தானத்தின் நடிப்பு ஆரம்பிக்கிறது.
ஹீரோயின் சமந்தா மறுபிறவியில் சந்தானத்தை ஹீரோவாக நினைத்து விரட்டி விரட்டி காதலிக்கிறார். வழக்கம் போல இல்லாமல் ஐந்து பக்க டையலாக் கொடுத்து சந்தானத்தின் நடிப்புத் திறமையை காட்ட வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர்.
இது பற்றி பேட்டியளித்த சந்தானம், நான் நடிக்கிற படங்களில் ஒரு காட்சிக்கு கிட்டத்தட்ட 15பக்க வசனத்தை பேசிவிடுவேன். ஆனால் இந்த படம் முழுக்க எனக்கு மொத்தம் 5 பக்க டையலாக் தான். இந்த படத்தில் நான் அதிகம் பேசுவது இல்லை. எல்லாமே உடல் அசைவுகளும் முக பாவனைகளும் தான். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் தான் முதல் முறையாக நடிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்றார்.
Post a Comment