கோலிவுட்டில் புது காதல் ஜோடியாக வலம் வருகின்றனர் பரத், சஞ்சனா. பிரபுதேவா, நயன்தாரா காதல் விவகாரம் முற்றுப்பெறாத நிலையில் புதிதாக ஒரு காதல் ஜோடி விஷயம் வெளியாகி உள்ளது. 'பாய்ஸ்', 'எம் மகன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பரத், கன்னட நடிகை சஞ்சனா ஜோடி காதல் வலையில் விழுந்திருக்கிறது.
சமீபத்தில் காதலர் தினத்தன்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பரத், சஞ்சனா ஜோடி ஜாலியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சஞ்சனாவிடம் கேட்டபோது,''என்னுடைய சொந்த வாழ்க்கையை பகிரங்கபடுத்த விரும்பவில்லை. எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையில் நான் இழுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
விராத் கோஹ்லி, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதையடுத்து அவர்களுடனான நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். யாராவது ஒருவருடன் நான் காணப்பட்டால் உடனே அவருடன் நான் டேட்டிங் செய்வதாக கூறுவது சரியல்ல. பரத் எனது நெருங்கிய நண்பர். இந்த நட்பு பாதிக்காது என்று நம்புகிறேன்.
சினிமாவில் இவரைத் தவிர வேறு பாய்பிரண்ட் யாரும் எனக்கு கிடையாது'' என்றார். இதுபற்றி பரத் கூறும்போது,''சஞ்சனா எனக்கு நண்பர். அவருடன் காதலர் தினத்தன்று விருந்து சாப்பிட்டதாக கூறுவது தவறு. அன்றைய தினம் என் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். இப்படி இருக்கும்போது சஞ்சனாவுடன் நான் எப்படி பொழுதை கழித்திருக்க முடியும்'' என்றார்.
Post a Comment