News Update :
Home » » சென்னையில் சர்வதேச பட விழா – ரஷ்ய பெண் இயக்குநர் பங்கேற்பு!

சென்னையில் சர்வதேச பட விழா – ரஷ்ய பெண் இயக்குநர் பங்கேற்பு!

Penulis : karthik on Tuesday, 18 October 2011 | 06:29

 

சென்னை: இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

செவன்த் சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து, சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

தொடக்க விழா 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடக்கிறது. விழாவை, இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைக்கிறார். அதே தியேட்டரில், தினமும் 3 காட்சிகள் வீதம் சர்வதேச படங்கள் திரையிடப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 20 படங்கள், இந்த பட விழாவில் திரையிடப்படுகின்றன.

விழாவில் ரஷ்யாவை சேர்ந்த லாரிகா டெலிகாட் என்ற பெண் இயக்குநரும் சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் குளோரியானாவும் கலந்துகொள்கிறார்கள்.

நிறைவு விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger