மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக்ரோஷனுக்கு படப்பிடிப்பின்போது முதுகில் அடிபட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிரபல டைரக்டர் கரன் ஜோகர் இயக்கி வரும் 'அக்னிபாத்' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இந்தப் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 110 கிலோ எடையுள்ள ஸ்டன்ட் நடிகரை ஹிருத்திக் ரோஷன் அலாக்காக தூக்குவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
ஹிருத்திக் ரோஷன் தனியொரு ஆளாக அந்த குண்டு துணை நடிகரை தூக்க விரும்பினார். உடனே துணை நடிகரை ஹிருத்திக் ரோஷன் சட்டென்று தூக்கினார். இதில் அவருடைய முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார் ஹிரித்திக்.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹிருத்திக் ரோஷனை பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஹிருத்திக் ரோஷன் காயம் அடைந்ததால் அக்னிபாத் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது.
Post a Comment