மும்பை விமான நிலையத்தில் அதிக பணத்துடன் வந்த நடிகர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.
இந்தி டிவி நடிகர்கள் விஜய் பவார் மற்றும் ஸ்வப்நில் ஜோஷி. இவர் மராத்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோதி பாண்டே என்ற பெண்ணுடன் பாங்காங் செல்வதற்காக (22/11/2011) மும்பை விமான நிலையம் வந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஜோஷி மற்றும் பவார் வைத்திருந்த பைகளில் தலா ரூ. 75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜோதி பாண்டேயின் பையில் ரூ. 40 ஆயிரம் இருந்தது. வெளிநாடு செல்லும் பயணிகள் இந்திய பணம் ரூ. 7 ஆயிரத்து 500 மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு. இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.
அது தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் என விசாரணையில் நடிகர்கள் தெரிவித்தனர். எனினும் விதிமீறி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததற்காக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த பணத்திற்கான ஆதாரங்களை காட்டியதையடுத்து 2 மணி நேரத்திற்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Post a Comment