News Update :
Home » » கொள்ளையர்களால் தவறவிடப்பட்டு சென்ற 30 இலட்சம் ரூபாய் பணம்

கொள்ளையர்களால் தவறவிடப்பட்டு சென்ற 30 இலட்சம் ரூபாய் பணம்

Penulis : karthik on Tuesday, 18 October 2011 | 06:31

 

புத்தளத்திலுள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 47 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட கொள்ளையர் அதில் முப்பது இலட்சம் ரூபா பணம் அடங்கிய பொதியைத் தவற விட்டுச் சென்றுள்ளனர் இச்சம்பவம் நேற்று காலையில் இடம்பெற்றுள்ளது புத்தளம் பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள வங்கி ஒன்றில் ஒருவர் 4,750,000 ரூபாவை வைப்பிலிடுவதற்காக அங்கு சென்றிருந்த போது திடீரென வந்த இனந்தெரியாத நபர்கள் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியோடிய போது அதில் முப்பது இலட்சம் ரூபா பணம் அடங்கிய பொதியை கீழே தவற விட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger