அதிக பட்ஜெட் காரணமாக, யுடிவி தயாரிக்கவிருந்த தனுஷ் படமான மாரீசன் கைமாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் நடிக்க, சிம்பு தேவன் இயக்கும் புதிய படம் மாரீசன். ரூ 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சரித்திரப் படம் இது.
யுடிவி இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை மற்றும் நட்சத்திரங்கள் தேர்வுக்கு முதலில் திருப்தி தெரிவித்த யுடிவி, சிம்பு தேவன் கேட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் தனுஷுக்கு இருக்கும் ஓபனிங் மற்றும் இந்தப் படம் நீண்ட நாள் ஓட்டத்தில் பெறும் வருவாய் போன்றவற்றைக் கணக்கிட்டு, 'இது ஓவர் பட்ஜெட்… கொஞ்சம் குறைச்சுக்கங்க," இயக்குநரிடம் கூறியுள்ளனர். மேலும் தனுஷின் சம்பளத்திலும் ஓரளவு குறைக்குமாறு கேட்டார்களாம்.
ஆனால் இதற்கு இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பிலிருந்து யுடிவி விலக, இப்போது படத்தை அண்டர்டேக் பண்ணிக் கொண்டுள்ளதாம் ஆஸ்கர் பிலிம்ஸ்!
ஏற்கெனவே ஆஸ்கர் பிலிம்ஸுக்கு ஒரு படம் நடித்துத் தர தனுஷ் ஒப்பந்தமாகியிருந்தார். மாரீசனை ஆஸ்கர் தயாரித்தால், கணக்கு சரியாகிவிடும் அல்லவா!
Post a Comment