விலைக்கு வாங்கப்பட்ட ஹக்கீம், விலைபேசப்பட்ட முஸ்லீம்களின் உரிமை
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக ச&# 3007;றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் வசிப்பிடமான அலரி மாளிகையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதுபற்றி எந்த அதிகாரபூர்வ முடிவையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
Post a Comment