News Update :
Home » » ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க

ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க

Penulis : karthik on Tuesday 11 September 2012 | 03:26




ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்! | இளமை

வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்ற�® �ர் நிபுணர்கள்.

லோ கட் ப்ளவுஸ்
க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிட& #3009;ம் என்கின்றனர் நிபுணர்கள்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். டைட் டி சர்ட் போடுவது, லோ நெக் ப்ளவுஸ் போடுவது என மார்பக அழகை வெளியே காட்டினால் அது அவர்களுக்கு ஆபத்தாகி வ&#300 7;டும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ். குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்கிறார் இது குறித்து ஆய்வு செய்த ஸ்கொயர்ஸ&#3021 ;. எனவே லோ கட் ப்ளவுஸ், டைட் டி சர்ட்ஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ்
இன்றைக்கு ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போடுவது நாகரீகமாகிவருகிறது. சுடிதார், டி சர்ட்க்ள் கூட ஸ்லீவ் லெஸ் ஆக வருகிறது. அக்குள் தெரிய உடுத்தும் ஆடைகளால் பணி புரியும் இடங்களில் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.

லெக்கின்ஸ்
உடம்பை இருக்கிப் பிடிக்கும் டைட் டாப்ஸ், லெக்கின்ஸ் அணிவது இன்றைக்கு பேஷனாகி வருகிறது. இது கேஷூவலாக நன்றாக இருந்தாலும் பணி இடங்களுக்குச் செல்லும் போது இந்த உடை கலாச்சாரம் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்கர்ட் அன்ட் லோ கிப் டாப்ஸ்
சில அலுவலகங்களில் ஸ்கட் மற்றும் லோகிப் தெரிய டாப்ஸ் அணிந்து செல்கின்றனர். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே இதுபோன்ற உடைகள் தடை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான வாசகங்கள்
உடைகளில் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய டி சர்ட்களை அணிந்து செல்வது ஏற்றதல்ல. அதேபோல் பின்னழகை எடுத்துக் காட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் ஏற்புடையதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

ஹேர் கலர்ஸ்
அலுவலகத்திற்கு செல்பவர்கள் அதற்கேற்ப தலை அலங்காரம் செய்து கொள்வது அவசியம். அதை விடுத்து கலரிங் செய்வது, கண்ட இடத்தில் வெட்டி விடுவது என தேவையில்லாத அலங்காரங்கள் உங்கள் மீது அவமரியாதையை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஹைஹீல்ஸ் வேண்டாமே
அலுவலகத்திற்கு 3 இஞ்ச் அளவில் அதிகம் கொண்ட ஹைஹீல்ஸ் செருப்புகள் அணிய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இது செக்ஸி தோற்றத்தை ஏற்படுத்துமாம்.

அலுவலகத்திற்கு என்று சில டிரஸ் கோட் உள்ளது அவற்றின் படி உடை அணிந்து சென்று உங்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger