இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்: அசத்துவாரா யுவராஜ் சிங்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று நடக்கிறது. முதல் போட்டி ரத&# 3021;தான நிலையில் புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இன்று களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு டி20 போட்ட 07;கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்க இருந்தது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு "கீமோதெரபி" சிகிச்சைக்கு ப் பின்பு மீண்ட யுவராஜ் சிங் 10 மாத இடைவெளிக்குப் பின்பு களமிறங்க காத்திருக்கிறார். இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக், கவுதம் கம்பீர் வருவர். நடுவரிசையில் சமீப காலமாக இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகள் தேடித் தரும் வீராட் கோஹ்லி, ச 09;ரேஷ் ரெய்னா, அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி உதவலாம். பார்ம் இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மா இடத்தை, மனோஜ் திவாரி எளிதாக தட்டிச் செல்லலாம். கடந்த யூலையில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பாதியில் திருப்பி அனுப்பப்பட்ட ஹர்பஜன், ஒருவழியாக இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார். இவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இன்று வாய்ப்பு கிடைப்பது சிரமமே. ஏனெனில் கடந்த 2 டெஸ்டில் 18 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ī 5;ார். வேகப்பந்து பந்துவீச்சில் இலங்கைத் தொடரில் அசத்திய இர்பான் பதான், மூன்றரை ஆண்டுக்குப் பின்பு அணிக்கு திரும்பிய பாலாஜி, ஜாகீர் கான், டிண்டா நம்பிக்கையுடன் செயல் ;பட வேண்டும். தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து தோற்றது. கடைசியாக பங்கேற்ற மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்த அணிக்கு இன்று, மெக்கலம், அதிரடி துவக்கம் தரலாம். பிராங்க்ளின், அணித்தலைவர் ராஸ் டெய்லர், கப்டில், வில ்லியம்சனும் அசத்த தயாராக உள்ளனர். டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வெட்டோரியுடன், வேகத்தில் மிரட்டிய டிம் சவுத்தி, பிரேஸ்வெல், சகலதுறை வீரர் ஜேக்கப் ஓரம் ஆகியோர் பந்துவீச்சில் திறமை வெளிப்படுத்தலாம் . மழையால் முதல் போட்டி ரத்தான நிலையில், இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால், களத்தில் மோதல் காத்திருக்கிறது. |
Post a Comment