தமிழில் அஜீத், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் டிரெய்லருக்கு வரவேற்பு தமிழில் அஜீத், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் டிரெய்லருக்கு வரவேற்பு
பழைய நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். கவுரிஷிண்டே இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் உருவாகிறது.
தமிழ் படத்தில் அஜீத் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இதில் நடித்ததற்காக அஜீத் சம்பளம் வாங்கவில்லை. சொந்த செலவிலேயே மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்தார்.
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறும்போது, அஜீத் தமிழில் பெரிய நடிகராக உள்ளார். நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவர் எளிமையாக இருக்கிறார். சிறந்த மனிதர் அஜீத் என்றார்.
இதற்கிடையில் ஸ்ரீதேவி அஜீத் இணைந்து நடித்த காட்சியுடன் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' தமிழ் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அஜீத் ரசிகர்களை டிரெய்லர் கவர்ந்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' ரிலீசாக உள்ளது.
Post a Comment