பூதாகர விடயமாகும் செல்வி ஜெயலலிதாவை இழிவுபடுத்திய சிறீலங்காவின் கேலிச்சித்திரம்
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் இழிவுபடுத்தும ;் வகையில், கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சிறிலங்காவின் அரசசார்பு முன்னணி சிங்கள மற்றும் ஆங்கில வாரஇதழ்களுக்கு எதிராக அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுநĮ 1;துள்ளன.
கடந்த ஞாயிறன்று வெளியான 'லக்பிம' சிங்கள வாரஇதழ் மற்றும் 'லக்பிம நியூஸ்' ஆங்கில வாரஇதழ் ஆகியவற்றில் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது.
ஹசந்த விஜேநாயக்க வரைந்த இந்தக் கேலிச்சித்திரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் மிகக் கேவலமான முறையில் சித்திரிக்கப் ;பட்டுள்ளனர்.
இந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட 'லக்பிம' வாரஇதழ்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தி ;லங்க சுமதிபாலவுக்குச் சொந்தமான சுமதி பப்ளிகேசன் நிறுவனத்தினால் வெளியிடப்படுபவையாகும்.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் ஊடக ஆலோசகரான பந்துல ஜயசேகரவின் ஆலோசனையின் பேரிலேயே இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரையப்பட்ட இந்தக் கேலிச்சித்திரத்தை உலகின் பல்வேறு பெண்கள் அமைப்புகளும் கண்டித்துள்ளன.
அதேவேளை ஊடகநெறிமுறைகளை மீறும் வகையில் இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடக அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'லக்பிம நியூஸ்' இணையப் பதிப்பில் இருந்து இந்தக் கேலிச்சித்திரம் அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, லக்பிம நியூஸ் பதில் ஆசிரியர் ரங்க ஜெயசூரிய, இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்.
இது ஓவியரின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை. இந்திய ஊடகங்கள் பலவும் சிறிலங்காவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. |
Post a Comment