மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.
வழக்கமான தன் பாணியை முற்றாக விடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்கி வருகிறார்.
ஜீவாவுடன் பூஜா ஹெக்டே, நரேன் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் 250 பேர் பங்கேற்று வருகின்றனர்.
ஆரம்பத்தில் திருவல்லிக்கேணியில் க்ளைமாக்ஸின் ஒரு பகுதியைப் படமாக்கிய மிஷ்கின், இப்போது மொத்த குழுவுடன் காரைக்காலுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இங்கும் இரவு நேர ஷூட்டிங்தான். இதுகுறித்து ஜீவா கூறுகையில், "இவ்வளவு பெரிய க்ளைமாக்ஸ் இதுவரை நான் நடித்த படங்களில் வந்ததில்லை. வழக்கம்போல இரவு நேரத்தில்தான் படமாகிறத� ��. படம் வந்தபிறகு இதற்கான காரணம் புரியும்," என்றார்.
யுடிவி நேரடியாக தயாரிக்கும் படங்களில் முகமூடியும் ஒன்று!
Post a Comment