இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார்.
இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு.
இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் எந்த நிறுவனத்துக்கும் ஆடியோவை விற்கவில்லை கவுதம் மேனன். அநேகமாக ரூ 2.50 கோடிக்கு இந்தப் படத்தின் ஆடியோ விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா பட ஆடியோ ரூ 1.75 கோடிக்கு விற்பனையானது. இதைவிட முக்கால் கோடி அதிக விலைக்கு நீதானே என் பொன்வசந்தம் விற்பனையாகவிருக்கிறது.
Post a Comment