சசிகலா நடராஜனுக்கு 6 வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததால் இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று அவரது வருகைக்காக சிறை வாசலில் பத்திரிகை யாளர்களை காத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென்று நடராஜன் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களீடம் வந்து, இன்று நடராஜன் விடுதலை இல்லை என்று அவர்களை களைந்துபோகச்செய்தனர். பத்திரிகையாளர� �கள் அங்கிருந்து அகன்ற நேரத்தில் ரகசியமாக சசிகலா நடராஜன் சிறையில் இருந்து வெளியேறி காரில் பறந்துவிட்டார். உடன் அவரது ஆதரவாளர்கள் துணை சென்றன்ர்.
வழக்கமாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் நடராஜன் எங்கேயும் சென்றதில்லை. முதல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டபோது, நள்� �ிரவிலும் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் காவல் நிலையத்திலும் நீதிபதி வீட்டிற்கு முன்பும் அரசுக்கு எதிராக கோப கணலை கொட்டினார்.
அதன்பிறகும் அவர் மீது அடுக்கடுக்காக போடப்பட்ட 5 வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கும் , காவல் நிலையைத்திற்கும் கொண்டுவரப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்களிட� ��் பேசக்கூடாது என்று போலீசார் தடுத்த போதும், அதையும் மீறி பத்திரிகையாளர்களிடம் வழக்கு சம்பந்தமாகவும் அரசின் பழிவாங்கின் நோக்கத்தில் பொய்வழக்கு போடப்படுகிறது என்றும் பேசியிருந்தார்.
நேற்று 10.5.2012 கூட அவருக்கு அனைத்து வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது என்பதையும் இன்று விடுதலை ஆகி தஞ்சைக்கு வருவார் என்பதையும் அவரது வழக்கறிஞர் வடிவேலு பத்திரிகையாளர்களூக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியை சொல்லினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று சிறையில் இருந்து வெளியேறியிருக்கும் நடராஜனை பத்திரிகை யாளர்களை சந்திக்க விடாமல் செய்த சக்தி எது? என்று கூடியிருந்த பத்திரிகை யாளர்� �ளுக்கும், அவருக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது.
Post a Comment