தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்து வந்தார். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு உள்கட்சி பிரச்சினை காரணமாக தி.மு.க. மேலிட த்தை விமர்சனம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டு கூறினார். இதனால் ஏற்பட்ட மோதலையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார். அவர் வகித்து வந்த தி.மு.க. துணைப் பொது செயலாளர் பதவியையும் கடந்த அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அ� ��ர் தீவிர அரசியலில் இருந்து விலகினார். நீண்ட நாட்களாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த பரிதி இளம்வழுதி மீண்டும் தி.மு.க.வுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். அங்கு அவரை பரிதி இளம்வழுதி சந்தித்து பேசினார்.
அதன்பிறகு கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்த பரிதி இளம்வழுதி தனது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டார். இதுபோல் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்த போது தனது நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.
மீண்டும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற உள்ள பரிதி இளம்வழுதி இல்ல திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசி� �லில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment