பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர� � கபில் சிபல் கூறியதாவது:
இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதமுள்ளவைகள் கிராம சேவாவின் கீழ் செயல்படுகிறது.
24, 969 தபால் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதில் 19,890 அலுவலகங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராம சேவாவின் கீழ் உள்ள அலுவலகங்கள் விரைவில் கணினிம யமாக்கப்படும். இதுபோன்ற தபால் துறை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக ரூ. 1,877.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தபால் துறை அலுவலகங்களில் ஏ.டி.எம். நிறுவனங்கள் அமைப்பதும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. விரைவில் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும். மேலும், தபால் அலுவலகத்தை வங்கிகளா� �� மாற்ற ஆகும் செலவு ஒரு வங்கியை தொடங்க ஆகும் செலவில் ஒரு பங்குதான் ஆகும். இதன்மூலம் தபால் துறைகள் வங்கிகளாக செயல்படும். இதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி கோரப்பட்டுள்ளது என கூறினார்.
Post a Comment