2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக ்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஆ. ராசா தவிர அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டார்கள். ஆ. ராசா கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு வரை ஜ� ��மீன் மனு தாக்கல் செய்யாமலே இருந்தார். சில தினங்களுக்கு முன் சித்தார்த் பெகுராவுக்கும் ஆர்.கே.சந்தோலியாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராசாவும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அவருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த ஜ ாமீன் மனு மீதான விசாரணையை மே 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Post a Comment