கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்ட ு வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து திடீரென பெண்களும், கிராம மக்களும் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையில் உதயக்குமார் இறங்கியுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் போராட்டத்தை தற்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இடிந்தகரையில் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்று ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் உதயக்குமார் அறிவித்திருந்தார். இதையடுத்து இடிந்தகரை, கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை ஜூன் 7ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடிந்தகரைக்கு யாரும் வந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை கிராமங்களின் எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் எதிர்பார்த்தபடி யாரும் வர முடியாமல் போய் விட்டது.
இதையடுத்து அந்தந்த கிராமங்களிலேயே பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 9 கிராமங்களில் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இடிந்தகரை போராட்டத்திலிருந்து பெண்கள் அனைவரும் திடீரென விலகி விட்டனர். யாரும் இன்று அங்கு வரவில்லை. இதனால் வெறும் 25 பேர் மட்டுமே தற்போது உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் கூடியுள்ளனர்.
தற்போது நடந்து வரும் போராட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு வெடித்ததால்தான் பெண்கள் வாபஸ் பெற்று விட்டதாக தெரிகிறது. இந்த சோதனை போதாது என்று ஆங்காங்கே கிராமங்களில் நடந்து வந்த போராட்டமும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் உதயக்குமார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளார். மக்களே போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பதால் உதயக்குமாரின் போராட்டம் தொடருமா என்பது பெரும் கேள்வ� �க்குறியாகியுள்ளது. அவர் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவாரா அல்லது வாபஸ் பெறும் முடிவை எடுப்பாரா என்பது தெரியவில்லை.
Post a Comment