மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவும் எத� �ர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், நித்தியானந்தாவை மதுரை இ� �ைய ஆதீனமாக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும். ஆனால் நித்தியானந்தா அவ்வாறு செய்யவில்லை.
மேலும் ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றார்.
இதற்கு பதிலளித்த நித்தியானந்தா இந்த கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் 10 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என்று கெடு' விதித்தார்.
இதுகுறித்து ஜெயேந்திரரின் கருத்துக்களை பெறுவதற்காக திங்கள்கிழமை காலை காஞ்சி சங்கர மடத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றனர்.
அங்கு பூஜைகளை முடித்து வந்த ஜெயேந்திரர் முன் பத்திரிகையாளர்கள் நின்றனர். இதை பார்த்த ஜெயேந்திரர் தனது வாய் மீது கையை வைத்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பது போல கூறிவிட்டு, உலக நன்மைக்காக நடைபெறும் சகஸ்கர சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டார்.
அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ஜெயேந்திரர் மவுனவிரதத்தில் இருக்கிறார். அதனால் இவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
Post a Comment