ஐ.பி.எல் போட்டித் தொடரின் 58-வது லீக் ஆட்டம் கொல் கத்தாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளையும், 3 தோல்வி என்ற நிலையில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் விளைய� ��டி 7 வெற்றி, 5 தோல்வி என்ற நிலையில் 14 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய பிரெண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டு, சகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் ஹெர்சல் கிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ஹெர்சல் கிப்ஸ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் களமிறங்கினர். எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவரையடுத்து கிப்ஸ் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.
இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
இவரையடுத்து கிப்ஸும் அரைசதம் அடித்து அசத்தினார்.
கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் � �ும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 60 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 109 ரன்களும், கிப்ஸ் 58 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் த� �வக்க வீரர்களாக மன்வீந்தர் பிஸ்லாவும் கௌதம் காம்பீரும் களமிறங்கினர். காம்பீர் ரன் ஏதும் எடுக்காமலும், மன்வீந்தர் பிஸ்லா 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து ஜாக் காலீஸும் மனோஜ் திவாரியும் களமிறங்கினர்.
திவாரி 27 ரன்களில் ஆட்டமிழக்க, யூசுப் பதான் காலிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செ� �்ல முயன்றனர். ஆனால் மும்பை அணியினரின் பந்து வீச்சால் அது முடியாமல் போனது. சிறப்பாக ஆடிய காலிஸ் 79 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155 மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யூசுப் பதான் 40 ரன்களும் தாஸ் 4 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிரடியாக ஆடி சதமடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
Post a Comment