அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் மே 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் ஜூலை 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதம் மூன்றாம் வாரத்திலேயே ஜனாதிபதி பதவிக்கான த� ��ர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்காக தேசிய கட்சிகள் அனைத்தும் தங்கள் சார்பில் ஜனாதிபதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கடைசி செயற்குழுக் கூட்டம் இதுதான். இக்கூட்டத்தின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் ஜனா திபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் மகாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி இன்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ம� �ன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment