லைபீரியா நாட்டின் எண்ணைக் கப்பலான ஸ்மிர்னி, 1.35,000 டன் எண்ணையோடு சோமாலியா சென்று கொண்டிருந்தது. தனது இரண்டாவது பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பலில் இந்தியர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுமாக மொத்தம் 15 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த கப்பல் ஓமன் நாட்டுக்கு அருகே வந்த போது சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன. அங்குள்ள நேரப்படி பகல் 11.50 மணியளவில் கப்பலில் இருந்து வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கப்பலின் நிறுவனம் கூறியுள்ளது.
அந்த பகுதியில் வரும் கப்பல்களை அங்குள்ள கடல் கொள்ளைக்காரர்கள் கப்பலை கடத்தி பல மில்லியன் டாலர்கள் பெறுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்டவர்களையும் கப்பலையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். < /div>
இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்குவதற்கு இந்தியா, இ ங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கூட்டுப்பாதுகாப்பு ரோந்துப் படையை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment