பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த& nbsp;ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன . தேர்வில் கணக்கு பாட தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே பிட் வழங்கிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே 22- ம் த� �தி வெளியாகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 க்கு மேல் வெளியிடப்படும். ஆனால் இந்தாண்டு மதியம் 1.30 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிட த்தக்கது.
Post a Comment