ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் 115 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 15.2 ஓவர்களில் வெற்றிப் பெற்றது. துவக்க வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு எளிய வெற்றியை பெற்று தந்தது.
ஐபிஎல் 5 தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்க� ��ட்களை இழந்து ரன்களை சேர்க்க தடுமாறியது.
அதிரடி துவக்க வீரர் கேப்டன் ஷேவாக் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்து விட்டு அடுத்த பந்திலேயே போல்டானார். அதன்பிறகு டேவிட் வார்னர்(8), ஓஜா(4), ஜெயவர்த்தனே(8) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய வேணுகோபால் ராவ் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின� �ன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசி வரை தட்டு தடுமாறி ரன்களை சேர்த்த யோகேஷ் நகர் 44 ரன்களை சேர்த்தார். அவருக்கு இர்பான் பதான்(13) ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 114 ரன்களில் சுருண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பென் ஹின்பென்ஹஸ் 3 விக்கெட்களை வீழ்த்தின ார்.
115 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடி மூலம் சிறப்பான துவக்கம் கிடைத்தது. துவக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 38 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் ப� ��்தில் அவுட்டானார். அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னாவுடன் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய் 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 48 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். சுரேஷ் ரெய்னா 2 சிக்ஸ் 1 பவுண்டரி அடித்து 28 ரன்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 15.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
Post a Comment