மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கடந்த 13 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அலெக்ஸ் பால் மேனன் இன்று பிற்பகலுக்கு மேல் விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் சுக்மா நகருக்குச் செல்லவுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் ராய்ப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை பிபிசிக்கு மாவோயிஸ்டுகள் அளித்த அறிக்கையில், மே 3ம் தேதி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, தங்களுடன் சட்டிஸ்கர் மாநில அரசு சார்ப� �ல் பேச்சு நடத்திய இரண்டு தூதுவர்களிடமும் ஒப்படைக்கவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை அரசுத் தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தூதர்களாக செயல்பட்ட பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றனர்.சிந்தால்னார் என்ற இடத்திற்கு அவர ்கள் முதலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் டட்மெத்லா என்ற இடத்திற்குச் சென்றனர். இது மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியாகும்.
இங்குதான் கலெக்டரை அவர்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர். அங்கு சென்ற பின்னர் இரு தரப்பும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் பிற்பகலுக்கு மேல் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை தூதர்களிடம் மாவோயிஸ்ட் தலைவர்கள் ஒப்படைத்தனர். அப்போது கிராமப் பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருந்தத ாக கூறப்படுகிறது.
இதையடுத்து கலெக்டருடன், அரசுத் தூதர்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் சிஆர்பிஎப் முகாமுக்குச் செல்லவுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத் தலைநகர் சுக்மாவுக்கு� �் செல்கின்றனர். பின்னர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு அலெக்ஸ் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு முதல்வர் ரமன் சிங்குடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அலெக்ஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது.
ஏப்ரல் 21ம் தேதி அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். 13 நாள் வனவாசத்திற்குப் பி்ன்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment