59-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கின� �ர். விழாவில் வங்காள சினிமா பிரபலம் சௌமித்ரா சாட்டர்ஜிக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது 'தியோல்', 'பையாரி' ஆகிய இரண்டு மராத்திய படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைக ் கூறும் இப்படத்தில் வித்யாபாலன் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். விருது விழாவில் வித்யாபாலன் தனது பெற்றோருடன் கலந்துகொண்டு விருது வாங்கினார்.
'தியோல்' படத்தை இயக்கி, அதில் நாயகனாக நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகர், சிறந்த வசன எழு� ��்தாளர் ஆகிய விருதுகளைப் பெற்றார். குர்விந்தர் சிங் இயக்கிய பஞ்சாபி மொழிப் படமான 'அன்கி கோரே ட டான்' படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான 'தங்கத்தாமரை' விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த பஞ்சாபி மொழிப் படம் ஆகியவற்றுக்கான விருதுகளும் 'அன்கி கோரே ட டான்' படத்துக்கு வழங்கப்பட்டது.
Post a Comment