தமிழ்நாட்டுக்கு கிடைத்து வந்த மின்சாரத்தை விட, 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் 2 மணி நேரமும், மற்ற ஊர்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது.
கிராமங்களில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்தது. மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ் நாட்டுக ்கே தர வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மொத்த நிறுவு திறன் 6 ஆயிரத்து 696 மெகாவாட். இதில் இருந்து அதிகபட்ச சராசரியாக 3 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் பெறலாம். காற்று வீசும் சீச� ��ில் இந்த மின்சாரம் கிடைக்கும். தற்போது காற்று சீசன் தொடங்கி விட்டது. சில தினங்களுக்கு முன்பு சராசரியாக 800 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆனது. தற்போது இந்த மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. கடந்த 1-ந்தேதி காற்றாலை மின் உற்பத்தி சராசரி 1400 ஆக அதிகரித்தது.
தென் மாவட்டங்களில் ஓரளவு மழையும் பெய்தது. எனவே மின்சார தேவை குறைந்து மின் உற்பத்தி அதிகமாக இருந்ததால் அன்று தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை. தொடர்ந்து 2 நாட்களுக்கு இந்த நிலை நீடித்தது. நேற்று காற்றாலை மூலமாக 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது. என்றால ும், சராசரியாக 1800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது. எனவே, தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு குறைக்கப்பட்டது.
நேற்று தமிழ்நாட்டில் மழை இல்லை. வெப்பத்தின் அளவும் அதிகரித்தது. இதனால் மின்சார தேவை அதிகமானது. இதை கருத்தில் கொண்டு நேற்று சென்னை மற்றும் அனைத்து நகரங்களிலும் மின்வெட்டு 1 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இன்றும் காற்றின் வேகம் நன்றாக உள்ளது. எனவே காற்றாலை மின்� ��ாரம் சராசரியாக 1800 மெகாவாட் அளவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றும் 1 மணி நேரமே மின்வெட்டு இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிராமங்களில் பல மணி நேரம் இருந்த மின்வெட்டையும் இப்போது சராசரியாக ஒரு மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றாலை அமைத்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. காற்றின் வே� �மும், வீசும் நேரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காற்றாலை மின்சார உற்பத்தி விரைவில் 3 ஆயிரம் மெகாவாட்டை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. எனவே மின் தேவை மேலும் அதிகரிக்கும். இதை ஈடு செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகமாகும். தற்போது மின் தேவை மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏற்ப மின் வெட்டு குறைக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழ ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு பற்றிய முறையான அரசு அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment